இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும்.
இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
“அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்.. அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் அந்த தாடியை வச்சிருக்கார்” என்றார்.
ஆக, டி.ஆர். தாடி ரகசியம் இத்தனை வருடம் கழித்து வெளியாகி இருக்கிறது.