Touring Talkies
100% Cinema

Wednesday, March 26, 2025

Touring Talkies

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிரச்சனையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை குஷ்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட பலர் நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய உடனேயே, நயன்தாராவுக்கும் ஒரு உதவி இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

அதே நேரத்தில், நயன்தாராவை படத்திலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குஷ்பு இதை முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,  மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. தயவு செய்து யாரும் அதை நம்ப வேண்டாம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுந்தர் எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.நயன்தாரா திரைத்துறையில் தனது திறமையை நிரூபித்த சிறந்த நடிகை. அவர் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்கள் ஆசீர்வாதமும் அன்பும் மட்டுமே எங்களுக்கு தேவை. எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News