பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான “லவ் டுடே” மற்றும் “டிராகன்” படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தன. தற்போது, அவர் “எல்.ஐ.கே” படத்தில் தனது நடிப்பு பணிகளை முடித்து, இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில், கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே, இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கான இசையமைப்பாளராக தற்போது திரையுலகில் சென்சேஷனாக உள்ள சாய் அபயங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.