Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“ரேப் சீனில் நடிக்க பயப்படுவேன்!: வில்லன் நடிகர் ஆனந்தராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது பல படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை காட்சிகளில் மக்களை மகிழ்விப்பவர் ஆனந்தராஜ்.  இவரது டயலாக் டெலிவரி, உடல் மொழி அனைவரையும் கவரும்.

ஆனால் ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றாலே ஆனந்தராஜ்தான்.  அதிலும் ஹீரோயின்களை பலாத்காரப்படுத்தும் காட்சி என்றால், ‘எங்கே ஆனந்தராஜ்’ என்று அழைப்பார்கள் இயக்குநர்கள்.

 இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “ரேப் காட்சிகளை  திரைப்படத்தில் பார்க்கும் பெண்கள், ‘மனிதனா இவன்’ என்று திட்டுவார்கள். ஆண்கள், ‘ச்சே.. ச்சே..’ என்று சொல்லிவிட்டு ரகசியமாக ரசிப்பார்கள்.

ஆனால் ரேப் காட்சியில் நடிப்பது என்றால் எனக்கு பயம். காரணம், அந்தக் காட்சியில் நடிகைகள் சாதாரமாண இந்தால் போதும். அவ்வப்போது ஓடுவது, கத்துவது, புரண்டு படுப்பது, பயந்தது போல முகபாவனை காட்டுவது என்று நடிப்பார்கள்.

வில்லன் நடிகர்தான் டயலாக் பேசி, வியர்க்க விறுவிறுக்க ஓடி, ரேப் செய்வது போல நடிக்கவேண்டும். தவிர, அதில் பல காட்சிகளில் க்ளோஸ் அப் இருக்கும். அதாவது கேமரா முன், முகத்தை கொடுரமாக.. செக்ஸ் பீலிங்குடன் பாவனை காட்ட வேண்டும்.

ஆகவே ரேப் காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலே பயப்படுவேன் என்பதே உண்மை!” என்றார் சீரியஸாக.

- Advertisement -

Read more

Local News