கமலுக்கு பெயர் வாங்கித்தந்த படங்களில் நாயகன் முக்கியமானது. அதில் அவர் கெட் அப் பெரிதும் பேசப்பட்டது.
இது குறித்து எம்எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது இப்படத்தை அவர் பார்த்த பொழுது, ‘கமலிடம் நீங்க யார் சாயலில் நடித்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுது கமல், ‘யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்று கேட்டிருக்கிறார்.அதற்கு எம் எஸ் பாஸ்கர், ‘பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் முன்னுறுத்தி தான் நீங்கள் நடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் நடிப்பை பார்த்ததும் எனக்குப் புரிந்து விட்டது’ என்று கூறியிருக்கிறார்.
இவர் சொன்னதை கேட்டு கமல், ‘எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள்’ என்று வியப்பில் பார்த்திருக்கிறார். இதுவரை இந்த சீக்ரெட் தெரியாத நிலையில் தற்போது இந்த ஒரு விஷயம் பலருக்கும் ஆச்சிரியத்தை அளித்து வருகிறது.