ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்றுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இதுவரை அறுபது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கவனத்தை ஈர்த்து உள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன், விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து, சோசியல் மீடியாவில் பலரும், “வெற்றி பெற்ற பட இயக்குநர்களை ரஜினி சந்திப்பதும், பிறகு தனது படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பதும் வழக்கம். ஆகவே லோகேஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்குப் பிறகு அவரது படத்தை ஆதிக் இயக்குவார்” என பகிர்ந்து வருகிறார்கள்