Friday, April 12, 2024

‘மகாமுனி’ படத்திற்குக் கிடைத்த சர்வதேச விருது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்த திரைப்படம் ‘மகாமுனி’.

இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்துஜா, மஹிமா நம்பியார் என்று இரண்டு நாயகிகளும் நடித்திருந்தனர். மேலும் ரோகிணி, இளவரசு மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

‘மெளன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார்தான் இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்திற்கு தற்போது சர்வதேச விருது கிடைத்திருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட் நகரில் வருடந்தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படமும் கலந்து கொண்டது. இந்த விருது விழாவில் 5 பிரிவுகளின் கீழ் இத்திரைப்படம் போட்டியிட்டது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்திற்கான ஜூரி விருது ஆகிய பிரிவுகளில் இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

விழாவின் முடிவில் இத்திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

இதனால் ‘மகாமுனி’ படக் குழுவினருக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News