நடிகர் ரோபோ சங்கர், பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருந்தார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மிகவும் மெலிந்துவிட்டார்.
இது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, “கடந்த சில மாதங்களாகவே எனது அப்பா மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதித்தது. சிகிச்சைக்குப் பிறகு இப்போது மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதுபோன்ற பழக்கங்களை இளம் தலைமுறையினர் தவிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.