Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வர இளையராஜாவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“பிரசாத் ஸ்டுடியோவுக்குள் சில நிபந்தனைகளுடன் ‘இசைஞானி’ இளையராஜா வரலாம்…” என்று பிரசாத் ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவின் ரிக்கார்டிங் தியேட்டரைத்தான் இசைஞானி இளையராஜா 30 வருடங்களாகப் பயன்படுத்தி வந்தார். அந்த அரங்கை இடித்துவிட்டு வேறு கட்டிடம் கட்டப் போவதாக இடத்தின் உரிமையாளரான பிரசாத் ஸ்டூடியோவின் குடும்பத்தினர் கேட்டபோது இளையராஜா அதை ஏற்க மறுத்தார் இளையாராஜா. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுக்கவும், ஒரு நாள் தியானம் செய்யவும் அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.

அப்பொழுது பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது. அவர் வந்தால் கூட்டம் கூடிவிடும். அவர் சார்பில் யாராவது வந்து பொருட்களை எடுத்துச் செல்லட்டும்…” என்றார்.

இதையடுத்து “வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும் அவருடன் இளையராஜாவும், ஸ்டுடியோ உரிமையாளர்களும் செல்லலாம்…” என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக இரு தரப்பும் பேசி செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பிரசாத் ஸ்டுடியோ தரப்பில், “சில நிபந்தனைகளுடன் இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்கத் தயார். ஆனால் அவர் ரூ. 50 லட்சம் இழப்பீடு கேட்டு எங்களுக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை முதலில் வாபஸ் பெற வேண்டும்.

பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தில் அவர் உரிமை கொண்டாடக் கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே இளையராஜாவுடன் வர வேண்டும். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க அவர் வரும்போது ஸ்டுடியோவுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக இளையராஜா தரப்பில் பிரமான மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்…” என்று தெரிவிக்கப்பட்டது.

பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு இன்று மாலைக்குள் பிரமான மனு தாக்கல் செய்வதாக இளையராஜாவின் தரப்பில் உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

- Advertisement -

Read more

Local News