விநியோகஸ்தர், தயாரிப்பாளர், திரையங்க உரிமையாளர் – அதற்கான சங்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்டவர் திருப்பூர் சுப்ரமணியம்.
தனது மனதிற்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
அவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “ஹீரோக்களின் சம்பளம் அளவுக்கு மீறி அதிகரிக்க, இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள்தான் காரணம். ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், உடனே மிக அதிக சம்பளம் கொடுத்து அவரை புக் செய்கிறார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகருக்கு ஐந்து, பத்து கோடி கொடுத்துவிடுகிறார்கள்.
தவிர, படத்தின் வசூல் நிலவரத்தை உண்மையாக சொல்வதில்லை. திரித்து அதிகமாக சொல்கிறார்கள். இதனால் ஹீரோக்களும் நமது படம் இவ்வளவு வசூல் செய்கிறதா.. சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை என நினைக்கிறார்கள்.
நான் உண்மையாந வசூலை சொன்னால் நடிகர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆகவே இப்போது சொல்வது இல்லை.
வெள்ளிக்கிழமை படம் வெளியானால், ஞாயிறுக்கிழமையே சக்ஸஸ் மீட் வைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சோகமான முகத்தோடு நிற்கிறார். அவரது முகமே வசூல் நிலவரத்தை காட்டிக்கொடுத்துவிடுகிறது” என்று வழக்கம்போல வெளிப்படையாக பேசினார் திருப்பூர் சுப்ரமணியம்.
அவரது முழு பேட்டியையும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..