1999ம் ஆண்டில் வெளியான சேது திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலா இயக்குநராக அறிமுகமானதும், நடிகர் விக்ரம் திரைவாழ்க்கை, உயர்ந்ததும் இந்தப் படத்தில்தான்.
படத்தைத் தயாரித்த கந்தசாமி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர், “நான் கட்டிட கான்ட்ராக்டர். எனக்கு சினிமா ஆசை இருந்தது இல்லை. ஆனால் எனக்குத் தெரிந்த பாலா, திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவருக்காகவே சேது படத்தைத் தயாரித்தேன்.
விக்ரமுக்கு முன்பு, கார்த்தி, செல்வா, அருண் குமார், விக்னேஸ் என பலரையும் தேர்வு செய்தார் பாலா. இறுதியில்தான் விக்ரம் முடிவானார்” என்று தெரிவித்து இருக்கிறார் கந்தசாமி.
மேலும், “அந்தப் படத்துக்குப் பிறகும் சில படங்களை தயாரித்தேன். ஆனாலும் இப்போதும் பஸ்ஸில்தான் போகிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.
அவரது முழுமையான பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…