தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் சேர்ந்து ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

தற்போது, ‘டாக்ஸிக்’, ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘ராக்காயி’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மேலாக, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் நயன்தாரா.
இப்போது, தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு புகைப்படத்தையும் அதனுடன், “உங்கள் இருவரையும் ஒவ்வொரு முறையும் வாழ்க்கையில் தேர்ந்தெடுப்பேன்” என்ற ஒரு உரையையும் பகிர்ந்துள்ளார்.