இயக்குனர் பாரதிராஜா பல நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர். இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர். இயக்குனர் இமையம் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர்.
அவருக்கு இணை அவர் மட்டுமே’ அவரது வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. ஷூட்டிங் சமயத்தில் மலை மீது ஏறி போய்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் காரில் சென்றோம். ஆனால் அப்பா முதலில் இங்கினார். திரும்பி பார்ப்பதற்குள் மலையின் பாதி தூரம் சென்று விட்டார் என தனது தந்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை நடிகர் மனோஜ் டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார்.