Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

எனக்கு கமல் சாருடன் நடிக்க ஆசை… நடிகை மிருணாள் தாகூர் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சீதாராமம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரைத்துறையில் பிரபலமானவர் மிருணாள் தாகூர். அதன் பிறகு, பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். தற்போது, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்பட்டியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபோது, கமல்ஹாசனுடன் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், “எந்த தமிழ் நடிகருடன் நடனமாட விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, அவர் மறுமொழியாக, “நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மற்றவர்களை ஓரங்கட்டக்கூடியவர் கமல்ஹாசன். எனவே, அவருடன் நடனமாடவே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News