நடிகர் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில், “நான் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது என்று நினைப்பேன். எனது திருமணத்தைக் சொந்த செலவில் செய்ய முன்கூட்டியே சம்பாதித்து சேர்த்து வைத்து பின்னர் மஞ்சிமாவை திருமணம் செய்தேன்.
அப்படித்தான் , கொரோனா காலத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் பணமில்லாமலாத நிலையில், என்னிடம் இருந்த பைக், கார் என எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். அப்போது என்னுடன் துணையாக இருந்தவர் மஞ்சிமா தான். எனவே எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் எடுப்பேன்” என கூறியிருக்கிறார்.