Friday, September 20, 2024

” நான் அப்படி சொல்லவே இல்லை”: மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக ஆக உள்ளது. இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதில் கலந்துகொண்ட, சமந்தாவிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அந்த நேர்காணலில் விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய நடிகை சமந்தா, “யார் யாரோடு சேர்ந்து டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என கடுமையாக விமர்சித்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதனை சமந்தா முற்றிலுமாக மறுத்து ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது முன்னாள் கணவரின் டேட்டிங் குறித்த எந்த கருத்தையும் தான் கூறவில்லை என மறுத்துள்ளார். தற்போது சமந்தாவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
சமந்தாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

- Advertisement -

Read more

Local News