ஹீரோயின் ஓரியண்டல் படம் என்றால், பல இயக்குநர்களின் சாய்ஸ், நடிகை சாய் பல்லவிதான். அதே நேரம், மசாலா படங்களையும் இவர் புறக்கணிப்பதில்லை. அந்த நிலையில், டாப் ரேஞ்சுக்கு உயர்ந்து வருகிறார் இவர்.
இவரிடம் சமீபத்தில், “எந்த வேடமாக இருந்தாலும், கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறீ்ர்கள். இந்தத் திறமை எப்படி வந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “எந்தவொரு பயிற்சி எடுத்தும் நான் நடிக்க கற்றுக்கொள்ளவே இல்லை. சாதாரண நேரத்தில் எப்படி பேசுகிறோனோ – இயல்பாக இருக்கிறேனோ அதே போலத்தான் திரையிலும் பேசுகிறேன்.. இயல்பாக இருக்கிறேன்.
என் அம்மாகூட, “வீட்டில இருக்கிறது போலத்தான் திரையிலும் இருக்கிறாய்.. வித்தியாசமே இல்லையே” என ஆச்சரிமயாக கூறுவார்.
ஆனால், ‘சாய்பல்லவி சிறப்பாக நடித்து உள்ளார்; கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்’ என பலரும் புகழும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நடிப்பு மட்டுமல்ல நடனத்தைக் கூட நான் தனிப்பயிற்சி எடுத்து கற்றுக்கொள்ளவில்லை. எல்லாமே இயல்பாக அமைந்துவிட்டது. இதுதான் என் ப்ளஸ் பாயிண்ட் போலும்” என்றார் சிரித்தபடியே.