Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“ஐ லவ் யூ”: முதன் முறையாக வெட்கப்பட்ட சீமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதோடு நடிகர் & இயக்குநர் என்கிற அந்தஸ்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார் சீமான். விரைவில் அவர்  ஒரு படத்தை இயக்கப்போவதாகவும் வெற்றி மாறன் இயக்கத்தில் இரு படங்களை தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தார்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதுவரை தனது குடும்பம் குறித்த பெரிய அளவில் பேசாதவர் சீமான். இந்த நிலையில், தனது மனைவி கயல்விழியுடன் ஒரு  வீடியோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தனிப்பட்ட, காதல், குடும்ப விசயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர் இருவரும்.

அப்போது சீமான் மனைவி கயல்விழியிடம், “சீமானுக்கு சமையலில் ஈடுபாடு உண்டா” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “உப்புக்கருவாடு மட்டும்தான் செய்வார்” என கிண்டலடித்தார்.

“முதலில் ஐ லவ்யு சொனன்னது யார்” என்றதற்கு, வெட்கத்துடன், “நான்தான்” என்று சிரித்தபடியே கூறினார் சீமான்.

பொதுவெளியில் ஆவேசத்தையே வெளிப்படுத்தும் சீமான் வெட்கப்பட்டது இதுதான் முதல் முறை!

- Advertisement -

Read more

Local News