Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொல்லாதவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இயக்குநர் வெற்றிமாறன்  முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். அடுத்த படமான ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் தேசிய விருதுகளைப் பெற்றர். அதோடு இந்தப் படத்துக்கு  6 தேசிய விருதுகள் கிடைத்தன.

தொடர்ந்து விசாரணை,  வடசென்னை, அசுரன் என அதிரடியான… அதே நேரம் உணர்வுபூர்வமான படங்களை அளித்து சிறந்த இயக்குநர் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருப்பவர்.

ஆனால் தான் இயக்கிய படங்களை தானே பார்ப்பதில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.

“திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் திருப்தி அடையவே மாட்டேன். இயக்கி முடித்து, போஸ்ட் புரடக்சன் வேலை முடிந்து படம் தயாரான பிறகு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன். ஏனென்றால் மீண்டும் படத்தைப் பார்த்தால்… ‘அட.. இந்த காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என தோன்றும். அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆகவே தொலைக்காட்சிகளில் எனது படத்தின் பாடல்கள், காட்சிகள் ஓடினாலும் உடனே சேனலை திருப்பிவிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார் வெற்றி மாறன்.

- Advertisement -

Read more

Local News