நடிகர் சூரியின் தாய் சேங்கை அரசி, சமீபத்தில் ஒரு யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “சூரிக்கு சின்ன வயசில இருந்தே சினிமாவுல சேரணும்னு ஆர்வம். பத்தாவது படிக்கிறப்பவே வீட்டுல சொல்லாம சென்னைக்கு போயிட்டான். பதிறிப்போன நாங்க, சென்னைக்கு வந்து அங்க இங்க தேடி கண்டுபிடிச்சோம். ஊருக்கு அழைச்சுட்டுப் போனோம்.
கொஞ்ச நாள்ல மறுபடி வீட்ல சொல்லாம போயிட்டான். சென்னைக்கு வந்து தேடியும் கண்டு பிடிக்க முடியல. கிட்டதட்ட ஒன்பது வருசம் அவன் எங்க இருக்கான்னே தெரியாம தவிச்சோம். பிறகு கண்டிபிடிச்சப்ப, ‘சினிமாவுல ஆளாகணும்னு சென்னைக்கு ரயில் ஏறினேன். நல்லா வந்தா ஊருக்கு வருவேன். இல்லேன்னா இங்கேயே வாழ்க்கையை ஓட்டிருவேன்’ திட்டமா சொல்லிட்டான். நாங்க யாரு சொல்லியும் கேட்கல.. ஏதோ இன்னைக்கு நல்லா வந்துட்டான்.. எல்லாம் அந்த கடவுள் செயல்” என்ற சேங்கை அரசி கதறி அழுதுவிட்டார்.