Thursday, April 11, 2024

“விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதப் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது விருமன்’ திரைப்படம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல; சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத் தன்மை வேண்டும். நம்மைவிட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை இந்த விருமன்’ படம் மூலமாக தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறோம்.

பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது “எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது…” என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கிராமத்தில்தான் நன்றாக போகும். நகரத்தில் ஓரளவுக்குத்தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த இரண்டு வருட கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலேயே உட்கார்ந்து ஓடிடி-யில் கொரியன் படமாகப் பார்த்து பழகி இருப்பார்கள். தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்ப மாட்டார்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நம் மக்கள் மாறிவிட்டார்களா? என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அப்படியெல்லாம் யாரும் மாறவில்லை. நம் பண்பாடு, கலாச்சாரம் என்றுமே மாறப் போவதில்லை என்பதற்கு இந்த விருமன்’ படத்தின் வெற்றி எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்தக் கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களில் தியாகத்தால்தான் நாங்கள் வெளியில் சென்று உழைக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா..? வாய்ப்பே இல்லையா..? ஆகையால், ஒரே நாளில் அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அம்மாவை அழைத்து வந்துருக்கிறோம் என்று கூறினார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை நாள் அவர்களை வெளியே அழைத்து சென்றிருப்போம்..? சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்..? ஆகையால்தான் இந்தப் படத்தில் அதிதியை ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்.

பெண்கள் அசதியாக இருக்கிறது. ஹோட்டலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கேட்பது சோம்பேறித்தனம் கிடையாது. தினமும் சமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்காவது சமைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்.

அந்த வகையில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், சந்தோசமாக இருக்கவும்தான் இந்த விழாவை திட்டமிட்டோம். இப்போது சந்தோசமாக இருக்கிறது. இதுபோல் விளையாடி பல நாட்கள் ஆகிறது. அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சிதான்.

பட குழுவினரும், பத்திரிகை நண்பர்களும் ஒன்று திரண்டு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் கண்டிப்பாக உணவருந்தி விட்டு செல்லுங்கள். இந்த விழாவை சிறப்பாக உருவாக்கி கொடுத்த ராஜாவுக்கு நன்றி…” என்றார்.

- Advertisement -

Read more

Local News