நடிகர் நாசர் ஒரு பேட்டியில், “பொதுவாக, வசனம் பேசும்போது, சூழலுக்கு ஏற்ப சற்று மாற்றிப் பேசுவேன். இயக்குநர்களும் அனுமதிப்பார்கள்.
மறைந்த கலைஞர் அவர்களது வசனத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். அதில் ஒன்றிலும் அப்படி பேசினேன். உடனே அருண் என்கிற சீனியர் அசோசியேட் இயக்குநர், ‘கலைஞர் வார்த்தையை எப்படி மாத்தலாம்..’ என்று ஆவேசப்பட்டார்.
நான் கலைஞரிடமே, ‘அய்யா.. உங்க வசனங்களை அப்படியே பேசணுமா.. எனக்கு வசதியா மாத்திப் போட்டுக்கலாமா’ என்று கேட்டுவிட்டேன்.
அவர், ‘அதனால என்னய்யா.. சொன்ன கருத்து சரியா இருந்தா போதும்..’ என்றார். அதன் பிறகு சில வார்த்தைகளை மாற்றிப் பேசினேன்” என்றார் நாசர்.