தமிழில் முன்னணி நடிகர்களான விஜயகாந், மோகன்லால், மம்முட்டி, சத்யராஜ் மற்றும் மோகன் ஆகியோருடன் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நளினி.
அந்த சமயத்தில் நடிகர் ராமராஜனை காதிலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ” எனக்கு சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆகவேதான் யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம்.. அப்படி நடந்துவிட்டால் சினிமாவில் நடிக்க வேண்டி இருக்காது என நினைத்தேன். அந்த நேரத்தில்தான் ராமராஜன் என்னை காதலிப்பதாக சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன். திருமணமும் நடந்தது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக காலத்தை கழிக்க வேண்டும் என்றே விரும்பினேன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும் நடித்துவருகிறேன்.. அப்படியே 41 வருடங்கள் ஆகிவிட்டன” என்றார்.