கடந்த தீபாவளிக்கு மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான சர்தார் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ எந்த விசயமா இருந்தாலும், அது ஏன் அப்படி நடக்குது.. அதன் பின்னணி என்ன என்பதை யோசிப்பேன்.. சாதாரண ஒரு வீடியோ பார்த்தாலும் இப்படி அது குறித்து சிந்திக்க ஆரம்பித்து விடுவேன். இதனால் சில சமயம் எனக்கே என் மீது கோபம் வரும்..
ஆனால் அப்படி சிந்திப்பதுதான் பல கதைகளை மனதிற்குள் உற்பத்தி செய்கிறது. சர்தார் படமும் அப்படித்தான்” என்றார் மித்ரன்.