Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“உசுரோடதாம்பா இருக்கேன்!”: வதந்திக்கு நடிகர் சுதாகர் முற்றுப்புள்ளி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு இணையதளங்களில் திடீர் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.   திரையுலகினர் பலரும் சுதாகர் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கினர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுதாகர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், “எனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி உள்ளன. அதை நம்பவேண்டாம். நான் உயிருடன் இருக்கிறேன். நன்றாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை” என்று பேசி உள்ளார்.

- Advertisement -

Read more

Local News