மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இதன் திரைப்படத்தின் தமிழ் ரீமெக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியைக நடிக்கிறார்.
இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்த நவீன காலத்திலும் ஆணாதிக்கம் இருக்கிறது. கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான்; எந்தக் கடவுளும் தன்னுடைய கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. சில சம்பிரதாயங்கள்தான் தான் சொல்கின்றன.
இதெல்லாம் மனிதர்கள் உருவாக்கியதுதான” என்றவர், “ எனக்கு வரும் கணவர் சமைக்கவில்லை என்றாலும், நான் சமைக்க வில்லை என்றாலும் உணவகத்தில் ஆர்டர் ஆர்டர் செய்து சாப்பிடுவேன்” என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
“அதாவது தான் சமைக்க மாட்டேன்.. கணவர்தான் சமைக்க வேண்டும்’ சொல்கிறார் போல, என செய்தியாளர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டு கலைந்தனர்.