Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

இயக்குநர் விக்ரமனின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ தமிழ்ப் படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

RK Celluloids நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் 3-வது படம் ஹிட் லிஸ்ட்’.

தமிழ் சினிமாவின் புது வசந்தமாக, புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா, இந்தப் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார்கள்.

இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை நிகழ்வு, இன்று எண்ணற்ற  திரைப் பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள… பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

இந்தப் பூஜை நிகழ்வில் இன்று திரை பிரபலங்கள் R.B.சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், P.L.தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்  கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன்,  பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர்.கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ்  உட்பட பலர் கலந்து கொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தினார்கள்.

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி, ஆக்சன், கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது.

படம் குறித்த  மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News