Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

Haters உங்களை கீழே இழுக்க முயற்சிப்பார்கள்…ஆனால் நீங்கள் எப்போதும் தலைநிமிர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்… யுவன் ஷங்கர் ராஜா ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தி கோட்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். “எல்லோருக்கும் வணக்கம், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு ‛தோல்வியில் இருந்து வெற்றி’ பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

ஆரம்பத்தில் நான் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைப்பதில் தோல்வியடைவேன் என்று பலர் கருதினர். அதன்பிறகு, தனியாக ஒரு அறையில் அமர்ந்து, கதவை பூட்டி அழுதுகொண்டிருந்தேன். எங்கு தவறு நடந்தது என்று யோசித்தேன். சில நாட்கள் கழிந்த பிறகு, மீண்டும் இசையமைக்கத் துவங்கினேன். இப்போது உங்கள் முன்னால் நிற்கின்றேன். இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே இருக்கும், ஆனால் நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அவற்றுக்கு செவி சாய்க்காமல், உங்கள் தலை நிமிர்ந்து செயல்பட வேண்டும். இதனால் தான் எனக்கு இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிந்தது. எதிர்மறை எண்ணங்களை நான் எப்போதும் புறக்கணிக்கிறேன். நல்ல இசையும், பாசிட்டிவிட்டிக்கும் மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்” என்று கூறியுள்ளார். “உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்று அவர் தனது உரையை முடித்தார்.

- Advertisement -

Read more

Local News