Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் மாற்றப்பட்டதா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் மாற்றப்பட இருப்பதாக கோடம்பாக்கத்து செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் இதுவரையிலும் ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ ஆகிய 4 படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது செல்வாவுடன் 5-வது முறையாக இணைகிறார் தனுஷ். இந்தப் படத்திற்கு முதலில் ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்திருந்தார்கள். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ம் தேதியன்று துவங்குவதாகவும் அறிவித்திருந்தார்கள்.

ஆனால், இந்தத் தலைப்பு செல்வாவின் முந்தைய படங்களின் தலைப்புகள் போல் இல்லை.. கவரும்விதத்திலும் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். டிவீட்டரிலும் தனுஷின் ரசிகர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதையடுத்து இந்தப் பெயரை மாற்றுவதற்கு தனுஷும், செல்வராகவனும் முடிவு செய்துள்ளனர். பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ‘ராயன்’ என்ற பெயரை முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News