Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

முதல் சந்திப்பிலேயே காதலை ஓகே செய்த ஹரீஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வருடம் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள் உண்டு. அதே நேரம் முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்து திருமணத்தில் முடிவது  என்பது அபூர்வம்.

இந்த அபூர்வ வகையைச் சேர்ந்தவர்கள், வருபவர் ஹரீஷ் கல்யாண் – நர்மதா தம்பதி.

சினிமா சின்னத்திரை இரண்டிலும் ரசிகர்களை ஈர்த்து வரும் ஹரீஷ் கல்யானுக்கு அறிமுகம் தேவையில்லை. இவரது காதல் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

இது குறித்து ஒரு யு டியுப் பேட்டியில் அவர் கூறும்போது, “முதல் பார்வையிலேயே  எங்களுக்குள் காதல் அரும்பிவிட்டது. ஆமாம்.. முதல் சந்திப்பிலேயே அவரிடம், ‘நான் நடிகர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. அதை விட ஓர் ஆணாக என்னிடம் பிடித்தது  என்ன’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘உங்களை நடிகராக பார்க்க முடியவிலல்லை. முதல் பார்வையிலேயே உங்களுடன் வாழ்ந்தால் என் குடும்பத்தில் இருப்பது போல உணர முடியும் என நினைத்தேன்’ என்றார்.

நானும், ‘என் வாழ்க்கையில் அம்மா, பாட்டி என  பல பெண்மணிகள் இருக்கிறார்கள்.. அவர்களுடன் பழகும் அதே தாய்மை உணர்வு உங்களிடம் பேசும் போது கிடைக்கிறது’  என்றேன்.

 இப்படி முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது” என்கிறார் ஹரீஷ்.  

- Advertisement -

Read more

Local News