Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஹரிஷ் கல்யாண்-ஐ இயக்கும் கவின் பட நடிகர்? படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர் ‘நூறு கோடி வானவில்’ மற்றும் ‘டீசல்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அதில் டீசல் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதற்கு பிறகு, ‘லிப்ட்’ என்ற படத்தை கொடுத்த இயக்குநர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிய ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News