நடிகர் கவுண்டமணிக்கு அறிமுகம் தேவையா என்ன..! திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இன்னும் அவர் நடித்த காமெடி காட்சிகள்தான், நகைச்சுவை சேனல்களில் ஒளிபரப்பப்பாகிக்கொண்டு இருக்கின்றன.
தமிழ்த்திரையுலகில் நாயகர்களையே கலாய்த்த முதல் காமெடியன் இவராகத்தான் இருக்கும். தவிர செந்திலுடன் சேர்ந்து இவர் செய்த காமெடிகளை நினைத்து சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.
சரி, விசயத்துக்கு வருவோம்.
இவருடன் சேர்ந்து சிரிக்கவைத்தவர்களில் ஒருவர் நடிகை வாசுகி.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகை சகிலா, “அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவேண்டும் என யாராவது நிர்ப்பந்தித்து இருக்கிறார்களா” என்று கேட்டார்.
அதற்கு அவர், “நான் கவுண்ட மணியுடன்தான் நிறைய நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். சின்னத்தாயி, நம்ம ஊரு பூவாத்தா.. இப்படிச் சொல்லலாம். பொதுவாக கவுண்டமணி, தன்னுடன் நடிக்கும் நடிகைகளை விட்டுவைக்க மாட்டார் என சிலர் பேசுவது உண்டு. ஆனால் அவர் ஒரு ஜெண்டில் மேன். படப்பிடிப்பு நடக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் நம்மிடம் பேசக்கூட மாட்டார்” என்று சர்டிபிகேட் கொடுத்தார் வாசுகி.