Touring Talkies
100% Cinema

Monday, August 4, 2025

Touring Talkies

நல்ல நேரமும் கெட்ட நேரமும்: பாக்யராஜின் சுவாரஸ்ய கதை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பீர் அடிக்கும் போது இன்ஸ்பெக்டர் வந்துட்டார்’ பாக்யராஜ் சொன்ன சூப்பர் சமாச்சாரம்!

இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாக்யராஜ்,  பேசும்போது ‘‘வாழ்க்கையில் நல்ல நேரம் கெட்ட நேரம் மாறி மாறி வரும்” என்றவர், அதைக் குறிப்பிடும்படி ஒரு கதையையும் கூறினார்:

“சில இளைஞர்கள்  பீர் அடித்துக் கொண்டு ஜாலியா போகும் போது, இன்ஸ்பெக்டர் வந்து அவர்களை பிடித்துவிட்டார்.  அவர் கொஞ்சம் சாஃப்ட் ஆனவர். ‘என்னடா எல்லாரும் படிக்கிற பசங்களா இருக்கீங்க, இப்படி தண்ணி அடிச்சுட்டு திறியுறீங்க? வழக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இனிமே இந்த தப்பு பண்ணாதீங்க.

உங்க அட்ரஸ் எழுதிக் கொடுத்துட்டு கிளம்புங்க” என்கிறார்.

வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நல்ல நேரம்.

அந்த இளைஞர்கள் தங்களது சரியான முகவரியை கொடுத்துவிட்டார்கள்.

ஒருவன் மட்டும்,  சரியான முகவரியை கொடுத்தால் இன்ஸ்பெக்டர் நேரடியாக வந்துவிடுவாரோ  என்று பயந்து தப்பான முகவரியை எழுதிக் கொடுத்தான்.

படித்த இன்ஸ்பெக்டர் ஓங்கி அறைந்தார். காரணம், அது அவரது முகவரி!

இதுதான் கெட்ட நேரம்” என்று பாக்யராஜ் சொல்ல அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

- Advertisement -

Read more

Local News