நடிகை கோவை சரளா, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய செய்திகளை பகிர்ந்து உள்ளார்.
அவர், “கவுண்ட மணியைவிட செந்திலுக்கு ஜோடியாகத்தான் பல படங்களில் நடித்து உள்ளேன். அவருடன் கரகாட்டகாரன் மிக பிடிக்கும். அந்த படத்துக்காக, கரகாட்டம் ஆடுபவர்களின் ஆட்டம், நடை உடை பாவனைகளை கவனித்து நடித்தேன்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப இயல்பாகவே என் குரல் மாறிவிடுகிறது. வேண்டுமென்றே அப்படி செய்வதில்லை. இது ஆச்சரியம்தான்” என்றவர், கவுண்ட மணியுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்:
“கவுண்ட மணி, நக்கல் செய்யும் விசயத்தில் ஓவராக இருப்பார். வைதேகி காத்திருந்தாள் படம்தான் அவருடன் நடித்த முதல் படம். அப்போது அவர் பிரபல நடிகர். நான் புதிது.
அவருக்கு கிண்டல் ரொம்ப அதிகம்.
என்னைப் பார்த்ததும், ‘எங்கேருந்து வர்றே’ என்றார். நான், ‘கோவை’ என்றேன்.
‘பெயர் என்ன’ என்றார். ‘கோவை சரளா’ என்றேன்.
‘அதென்ன கோவை’ என்றார். பதிலுக்கு நானும் கிண்டலாக சொன்னேன்..” என்றார் கோவை சரளா.
அவர் கிண்டலாக சொன்னது என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..