பாலச்சந்தர் இயக்கி இளையராஜா கடைசியாக இசையமைத்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். அதன்பின் இருவரும் இணையவே இல்லை. இந்த படத்தில் பின்னணி இசைக்காக பாலச்சந்தர் காத்திருந்தபோது ராஜா வர நேரமானதால் அந்த படத்தில் அவர் போட்ட ஒரு பாடலையே பாலச்சந்தர் தேர்ந்தெடுத்து பயன்படுத்திவிட்டார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என சொல்லிவிட்டார்.
இதுதான் பலரும் சொல்வது.
அதேநேரம் அதற்குமுன்பே அதாவது பாலச்சந்தர் சிந்து பைரவி எடுத்த போதே இருவருக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டதாக டாக்டர் காந்தராஜ் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். சாதி தொடர்பாக பாலச்சந்தர் பற்றி கங்கை அமரன் அடித்த கமெண்ட் பாலச்சந்தருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதை அவர் வெளியே கட்டிக்கொள்ளவில்லை. அதன்பின்னரும் சில படங்களில் ஒருவரும் ஒன்றாக வேலை செய்தனர். ஆனால், ரஹ்மானை அறிமுகம் செய்து பாலச்சந்தர் தான் யார் என காட்டிவிட்டார்’ என காந்தராஜ் கூறியிருந்தார்.