Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விசில் பறக்க வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பி.டி. சார்’. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்  முன்ணிலையில் திறந்த வெளியில் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில் ‘P T சார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது.

‘வேல்ஸ் திருவிழா’வில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்ற முனைவரும், நடிகருமான ஆர் பாண்டியராஜன், இசையமைப்பாளரும், நாயகனுமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிகை கஷ்மிரா பர்தேசி, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே, கணேஷ் பேசுகையில் ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவில் எங்களுடைய  தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிடுகிறோம். இந்த படத்திற்கு ‘P T சார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பி. டி. சாரை அனைவருக்கும் பிடிக்கும். இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி விரைவில் நம் கல்லூரியில் டாக்டர் பட்டத்தை பெறவிருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி, அரசு பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து தன்னுடைய ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருக்கிறார். அதனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி, இனி டாக்டர் ஹிப் ஹாப் தமிழா ஆதி  என அழைக்கப்படுவார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பெறுமையுடன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News