மாமன்னன் படத்தில், வடிவேலு சபாநாயகராக நடித்த பிறகு, சபாநாயகர் குறித்த பேச்சு ரொம்பவே அடிபடுகிறது. பலரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தனபால்தான் முதல் தலித் சபாநாயகர் என எழுதி, பேசி வருகின்றனர்.
ஆனால் அதற்கு முன்பாக… 1950களிலேயே ஒரு தலித் சபாநயகர் இருந்தார்.
தமிழ்நாட்டை உள்ளடக்கிய மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி முதல்வராக இருந்த காலம். அப்போது அவர், குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்றை கொண்டுவர முடிவெடுத்தார். பாதி நேரம் பள்ளி.. மீதி நேரம், தந்தையின் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு தந்தை பெரியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். போராட்டங்கள் அறிவித்தார்.
இந்த நிலையில் இதை சட்டமாக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. . அதில் 137-137 என்ற சமநிலை ஏற்பட்டது. பின் தமிழ்நாட்டின் எதிர்கால கல்வியை நிர்ணயம் செய்யும் அந்த ஒற்றை வாக்கினை நபர் ஒருவர் பதிவு செய்திருந்தார். அந்த ஒற்றை வாக்கு தான் குலக்கல்வி திட்டத்தை கிடப்பில் போட வைத்தது.