Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“செங்களம்” இணையத்தொடர்  வெற்றி: அரசியல் தலைவர்கள் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸீ 5 ஓடிடி தளத்தில் வெற்றிகரமாக அமைந்துள்ளது செங்களம் இணைய தொடர். அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில்,  எஸ் ஆர் பிரபாகரன் இயக்க , கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள தொடர் இது.இது குறித்து படக்குழுவினர் கூறியபோது, “செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. அரசியலுக்குள் பதவிக்காக நிகழும் போட்டி, பொறாமை, துரோகம் என ஒரு முழு நீள அரசியல் களத்தை நெருக்கமாக அணுகிய வகையில் மிக முக்கிய படைப்பாக மாறியிருக்கிறது “செங்களம்”இணைய தொடர். இதற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது” என்றது.இந்நிலையில்,  தொடரின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், நடிகை ஷாலி நிவேகாஸ் மற்றும் நடிகர் டேனியல் முதலான படக்குழுவினர் பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நினைவிடம், புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடம் மற்றும் இறுதியாக காமராஜர் நினைவிடத்திற்கு சென்று, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் துப்புறவு பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி, இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடினர்.

மாறுபட்ட அரசியல்களத்தில், பரபரப்பான “செங்களம்”  இணையத் தொடரை  ஸீ 5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.

 

 

- Advertisement -

Read more

Local News