‘இரவின் நிழல் படத்தில் அதி கவர்ச்சியாக நடித்தார்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானவர் நடிகை ரேகா நாயர்.
இவர் பேட்டி ஒன்றில், “சினிமாவில் பெண்கள் என்றால் அந்தபுறத்தில் ஆடுவது, ராஜாக்கள் கம்பீர நடை போடுவது போல் காட்சி படுத்துவார்கள். பொதுவாக நடிகைகளை ஒரு கவர்ச்சி பொருளாககாட்டும் இயக்குனர்களே அதிகம். நமது சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நூறு பேரில் 20 பெண்கள் மட்டுமே அவர்கள் நினைத்ததை செய்கின்றனர். சாதனைப் பெண்ணாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். மீதி பேர் வெறும் ஐட்டம் சாங்கு ஆடும் பெண்ணாக பார்க்கபடுகிறாள்.
இங்கு எத்தனையோ பெண்கள் ஆண்கள் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றி இருக்கின்றனர். உலகத்தை மாற்றி இருக்கிறார்கள். சமூகத்தை மாற்றியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கும் இயக்குனர்கள் இல்லையா என தோன்றுகிறது” என்றார் ரேகா நாயர்.