Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ரியல் அப்பா – மகன் படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தந்தை மகன் உறவு குறித்த திரைப்படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. நிஜ அப்பா –  மகன் தோன்றிய படங்கள் நினைவிருக்கிறதா..

இந்த வகையில் பார்த்தால்,   சிவாஜியுடன் –  பிரபு நடித்த படங்கள் தான் அதிகம்.  நீதியின் நிழல், வெள்ளை ரோஜா, சாதனை, நாம் இருவர், நேர்மை, நீதிபதி, இரு மேதைகள் ஆகிய படங்களில் நடிகர் திலகம் சிவாஜியுடன் அவரது மகன் இளைய திலகம் பிரபு நடித்து இருக்கிறார். 

அடுத்து, தியாகராஜன்-பிரசாந்த் இருவரும் இணைந்த படங்கள். க்கும் தான்.  அதாவது தந்தையின் இயக்கத்தில் பிரசாந்த் பல படங்களில் நடித்துள்ளார். ஆணழகன், ஷாக், பொன்னர் சங்கர், மம்பட்டியான், அந்தகன் ஆகிய படங்கள்.


இந்த வரிசையில் இயக்குனர் டி.ராஜேந்தர் தனது மகன் சிலம்பரசனை தனது படங்களில் நடிக்க வைத்ததையும் மறந்துவிட முடியாது. 

 

எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம் ஆகிய படங்களில்  குட்டி சிம்பு நடித்துள்ளார். 2002ல் தந்தை டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் சிலம்பரசன் தமிழ்சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.   

அதேபோல தற்போது இளையதளபதி விஜய் தனது மகன் சஞ்சய் உடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அசத்தலாக ஆடியுள்ளார்.   பாக்யராஜ் உடன் அவரது மகன் சாந்தனு வேட்டியை மடிச்சுக் கட்டு என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.


 

அதே போல விக்ரம் மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த படம் மகான்.

பெரும்பாலும் இப்படிப்பட்ட பங்கள்  ஒர்க் அவுட் ஆகி வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News