Thursday, November 21, 2024

நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடன  இயக்குநரான ‘கூல்’ ஜெயந்த் இன்று சென்னையில் காலமானார்.

ஜெயராஜ் என்கிற இயற் பெயர் கொண்ட அவர் நடன  இயக்குநர் ராஜு  சுந்தரத்திடம் உதவியாளராக 5 ஆண்டுகளில் 400 படங்களில் பணியாற்றியுள்ளார்.

காதல் தேசம்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர். அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ மரியா’ மற்றும் ‘கல்லூரி சாலை’ ஆகிய பாடல்களில் இவர் அமைத்திருந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடன  இயக்குநராக மாறிப் போனார்.

தன் பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன  இயக்குநராக பணிபுரிந்த கூல்’ ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அஜீத்தின் வாலி’ படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’, விஜய்யின் ‘குஷி’ படத்தில் ‘மொட்டு ஒன்று’, ‘ப்ரியமானவளே’ படத்தில் ‘வெல்கம் பாய்ஸ்’, சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் ‘சாக்லேட் சாக்லேட்’,  ‘இயற்கை’ படத்தில் ‘சீட்டு கட்டு’ ஆகிய பாடல்களின் வெற்றி இவருக்குப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

‘கடல் பூக்கள்’ படத்துக்காக ‘சாந்தாராம் விருது’, ‘அ போர் த ஸ்டூடண்ட்ஸ்’ படத்துக்காக கிரிடிக் விருது, ‘வேசம்’ படத்துக்காக கேரள அமிர்தா விருது ஆகிய விருதுகள் பெற்றுள்ளார். நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

கூல்’ ஜெயந்த் கடந்த சில மாதங்களாக புற்று நோய் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News