‘ஜெய் பீம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
இயக்குநர் பாண்டியராஜ் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். தவிர, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இமான் இசைமயமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்தப் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியை வெளியிட்டுள்ள இயக்குநர் பாண்டிராஜ், “எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது. சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும்…” என்று தெரிவித்துள்ளார்.