Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஆத்திரமான ஜெயலலிதா.. விட்டுக்கொடுத்தசவுகார் ஜானகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெமினி நிறுவனம் தயாரிப்பில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஜோடியாக  நடித்த  ஒளிவிளக்கு படத்தில்  சவுக்கார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

படத்தில் சௌகார் ஜானகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம். அதனால் ஜெயலலிதா பெயருக்கு முன்னால் ஜானகி பெயரைப் போட தயாரிப்பு நிறுவனம் யோசித்திருக்கிறது.

இதை தெரிந்துகொண்ட ஜெயலலிதா, “எம்.ஜி.ஆருருக்கு நான் தான் ஜோடி எனது பெயர் தான் முதலில் வரவேண்டும். அதன்பிறகு தான் ஜானகி பெயர் வர வேண்டும்” என்று வற்புறுத்தினார்.

இதை  தயாரிப்பு நிறுவனம் ஜானகியிடம் கூறியபோது அவர் ஒப்புக்கொண்டார். அவரது பெரிய மனதை பாராட்டிய தயாரிப்பாளர், “உங்களது பெயர் இரண்டாவதாக வந்தாலும், படத்தினால் உங்களுக்குத்தான் பெரும் புகழ் கிடைக்கும்” என்றார்.

அதே போல, படத்தில் வரும் இறைவா.. பாடல் மூலம் சௌகார் பெரும் புகழ் பெற்றார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஜெயலலிதாவும், ஜானகியும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

 

- Advertisement -

Read more

Local News