Saturday, September 21, 2024

“எனிமி என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தது ஏன்..?” – இயக்குநரின் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் அதற்கு வரி விலக்கு அளக்க வேண்டும்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் அரசுக்குக் குரல் கொடுத்து வரும் வேளையில், ஆங்கிலக் கலப்போடு மட்டுமல்ல நேரடி ஆங்கிலப் பெயர்களிலேயே டைட்டில் வைப்பதும் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது.

அதில் லேட்டஸ்ட் ‘எனிமி’ திரைப்படம். விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், “இந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டிய அவசியமென்ன…?” என்ற கேள்விக்கு இயக்குநர் ஆனந்த் சங்கர் பதில் அளிக்கையில், ‘‘தியேட்டர்களை இப்போதான் திறந்துள்ளார்கள். பெரிய படங்களின் ஆயுட் காலம் ரெண்டு அல்லது மூன்று வாரங்கள்தான். இப்போது இருக்கிற சூழலில் ஓ.டி.டி-யிலதான் ஒரு படம் அதிக நாட்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது ஓடிடியில் இருக்கும் தமிழ் மொழிப் படங்களை மற்ற நாட்டு மக்களும் ஆர்வமாகப் பார்க்கிறார்கள். இதனால், ஓடிடி நிறுவனங்களான நெட்ஃபிளிக்ஸ், அமேஸானில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் ஈர்ப்பதுபோல தலைப்பு வைப்பது தேவையாய் இருக்கிறது.

தமிழ்ப் படமா இருந்தாலும் டைட்டில் அவர்களுக்குப் புரிவதுபோல இருந்தாலே எல்லோரும் இந்தப் படத்தை ஓ.டி.டி-யில பார்ப்பார்கள். அதனால்தான், எல்லா நாட்டு மக்களுக்கும் பொதுவான இந்தத் தலைப்பை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறோம்.” என்றார்.

அடடா.. மில்லியின் டாலர் பதிலா இருக்கே..!?

- Advertisement -

Read more

Local News