உலகின் மிகப்பெரிய திரைப்படத்துறையாக இருப்பது அமெரிக்காவின் ஹாலிவுட். இங்கு பணியாற்றி வரும் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மே 2ம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால் பல்வேறு படங்களின் பணிகள் தடைபட்டுள்ளன.
மேலும், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் வெப் தொடர்களுக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் எம்மி விருதும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றதாகும்.
இந்த விருது விழா வழக்கமாக செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த வருடத்துக்கான 75 வது எம்மி விருது விழா, செப்.17-ம் தேதி நடத்தப்பட இருந்தது.
இந்நிலையில் வேலை நிறுத்தம் காரணமாக, அடுத்த வருடம் ஜனவரி 15-ம் தேதி விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.