Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

’டங்கி’ இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியீடு.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான
கதையை மனதை மயக்கும் வகையில் நகர்கிறது.

“டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் டங்கி படத்தின் கதாப்பாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது கு றிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News