ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் நடிப்பைத் தொடங்கியவர், மேடை நாடகக் கலைஞரான மாயா கிருஷ்ணன். தொடர்ந்து, ‘மகளிர் மட்டும்’,‘வேலைக்காரன்’, ‘2.0’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் ராஜீவ் கிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கிந்தன் சரித்திரம்’ நாடகம் கோடம்பாக்கத்தில் உள்ள ‘இடத்’தில் (IDAM) நடந்தது.
இதுபற்றி அவர், “கிந்தன் அப்படிங்கறவரோட வாழ்க்கைதான் கதை. அவர் யாரைச் சந்திக்கிறார், என்னென்ன பிரச்சினைகள் அவருக்கு வருதுன்னு நாடகம் போகும். இதுல அதிகமா எம்.ஜிஆர் பாடல்கள் இருக்கும். அவர்பாடலின் தத்துவங்கள், கருத்துகள் கதைசொல்றதுக்குத் தேவைப்பட்டது. அதனால அதை சேர்த்திருக்கோம். இதுல, நடிகர் தரணிதரன், கானா பாடகர் டேவிட் நடிக்கிறாங்க. இவங்ககிட்ட இருந்து நானும் கத்துக்கிறேன்.
இப்போவரை, 36 ஷோ முடிச்சுட்டோம். அடுத்து பெங்களூரு போகப் போகப்போறோம். 100 ஷோ நடத்தணும்னு ஆசை இருக்கு” என்றார்.
சினிமாவுக்கு வந்த பிறகும், நாடகங்களில் நடிக்கும் இவர் ஒரு ஆச்சரியம்தான்!