சுந்தர் சி இயக்கத்தில் தமிழில் ஆக்ஷன் படத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு `ஜெகமே தந்திரம்’ பட வாய்ப்பு கிடைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது வெளியாகியுள்ள கட்டா குஸ்தியில் குஸ்தி சண்டை போடும் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா லட்சுமி.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலின் நேர்காணலின் போது திருமணம் பற்றி அவர் பேசும்போது விவாகரத்து, பிரச்சனை, அதனால் ஏற்படக்கூடிய மன உலைச்சல் இதுவெல்லாம் திருமணம் என்ற பந்தத்தில் இணையும் போது ஏற்படுகிறது.
அதனால் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. எனக்கு வாழ்க்கை துணை கண்டிப்பாக வேண்டும் ஆனால் அதற்கு திருமணம் தீர்வாக நான் பார்க்க வில்லை என்றார்.
எனக்கு பிடித்த என்னை புரிந்து கொண்டவருடன் சட்டரீதியாக வாழ்வேன் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.