Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“குடிக்காதீங்க!”: ரஜினி பேச்சுக்கு குவியும் பாராட்டு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோலாகலமாக நடந்து முடிந்தது ஜெய்லர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. இதில் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பேச்சு, காக்கா பேச்சு ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனாால் ஒரு விசயத்தை அனைவரும் பாராட்டுகின்றனர்.

மது குறித்த ரஜினியின் பேச்சுத்தான் இந்த பாராட்டுக்களைப் பெற்றுத்தந்து உள்ளது.

நிகழ்வில் ரஜினி, “நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பெரிய இடத்தை அடைந்திருப்பேன். மது போதையில் சரியான முடிவு எடுக்க முடியாது. குடிப்பதால், மனைவி, தாயும் சிரமமப்படுவார்கள். ஆகவே குடிக்காதீர்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும், ‘குடியால் எத்தனையோ பேரின் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. இதை ரஜினிமாதிரியான ஒரு நிலைமையில் இருக்கும் ஒரு நபர் சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள்’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News