எந்தவொரு நடிகராக இருந்தாலும், அவருக்கு முன்பே நடித்துக்கொண்டிருந்த ஏதாவது ஒரு நடிகரின் பாதிப்பு இருக்கும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் இன்ஸ்பிரேசன் இருக்கவே செய்யும்.
நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜிதான். அவருக்கு யாருடைய இன்ஸ்பிரேசன் இருந்தது என்பதை அறிய நடிகர் சத்யராஜூக்கு ஆசை ஏற்பட்டது.
இருவரும் இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு இடைவேளை..
மெல்ல சத்யராஜ், இந்த விசயத்தை கேட்டார்.
அவரைப் பார்த்த சிவாஜி, “ ஏண்டா.. நான் யாரைப்பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெரியணுமா..” என்று கேட்க.. சத்யராஜ் பதறிப்போய், “அய்யோ.. அப்படி இல்ல.. சும்மா தெரிஞ்சிக்கணும்னு..” என்று இழுத்திருக்கிறார்.
பிறகு சிவாஜி, “நான் எந்த ஹாலிவுட் நடிகனையும் காப்பி அடிக்கலை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்னா அது எம்.ஆர்.ராதாதான். உங்களுக்கெல்லாம் சினிமாவில இரட்டைக் குரல்ல பேசுற எம்.ஆர்.ராதாவைத்தான் தெரியும். நாடகத்தில அவர் ரேஞ்சே வேற. அப்படி ஒரு நடிப்பு. அவரை அணுஅணுவா ரசிச்சிருக்கேன்” என்றார் சிவாஜி.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா சம்பவங்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU